மிரள வைக்க வருகிறது "காஞ்சனா 4″... அசத்தல் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்.!

நடன இயக்குனரும், நடிகருமான  ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார்.

நடன இயக்குனரும், நடிகருமான  ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம். ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு காஞ்சனா படத்தின் 4-வது பாகம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய லாரன்ஸ் ” காஞ்சனா 4 கண்டிப்பாக வரும். அதற்கான 4 ஸ்கிரிப்ட் ஒர்க் நடந்து வருகிறத” என கூறியுள்ளார்.

unknown node

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படம் முனி இந்த படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர்ந்து படங்களை இயக்கி இருந்தார். இந்த 3 படங்களுமே சூப்பர் ஹிட் ஆன நிலையில். தற்போது 4-வது பாகம் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.