1989 ஆம் ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார்.
unknown nodekarakattakaran [Image Source : Twitter]
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி செந்திலின் காமெடி காட்சிகள் மற்றும் பாடல்கள் என எல்லாமே மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே கூறலாம்.
unknown nodekarakattakaran [Image Source : Twitter]
இந்த நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்த இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய கங்கை அமரனின் மகனும், இயக்குனருமான வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளாராம்.
unknown nodeVenkat Prabhu [Image Source : Twitter]
முதல் பாகத்தில் நடித்த பலரும் இரண்டாவது பக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கஷ்டடி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.