இன்று வெளியாகும் கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல்...!

The song 'Draupadi's Kiss' featured in the movie Karnan will be released today.

கர்ணன் படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகை ராஜீஷா விஜயன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல், மற்றும் பண்டாரத்தி புராணம் என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இந்த படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற மூன்றாவது பாடலை வருகின்ற 11 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில் நேரம் அறிவிக்கப்படவில்லை. அதன்படி இன்று அந்த பாடல் வெளியாகும் என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.