ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடித்து வரும் ஜப்பான் திரைப்படமும், தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeDhanush vs Karthi [Image Source : Twitter]
கார்த்திக்கு கடைசியாக வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று அவருக்கு மார்க்கெட்டை உயர செய்தது. அதைப்போல தனுஷிற்கு கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
unknown nodeunknown nodekodi vs kaashmora [Image Source : Twitter]
மேலும் இதற்கு முன்பே கடந்த 2016-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடித்த கொடி திரைப்படமும். கார்த்தி நடித்த காஷ்மோரா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியானது. இதில் கொடி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.