புதிய படத்தில் அண்ணியார் உடன் நடிக்க இருக்கும் கார்த்தி

this news gives information about Karthi will be acting the role of brother in the new film-puthiya padathil anniyarudan nadikum karthi

இப்படத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் அன்சன் பால் நடிக்கவுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில்  சமீபத்தில் வெளியான  “தேவ் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததால் மிகுந்த வேதனை அடைந்தார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை எஸ் .ஆர் பிரபு தயாரிக்கிறார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தை இயக்குனர் ஜீது ஜோசப் இயக்குகிறார். அவர் தமிழில் பாபநாசம் திரைப்படத்தை  இயக்கியவர்.

இப்படத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் அன்சன் பால் நடிக்கவுள்ளார்.

நடிகர் அன்சன் பால்  90ml படத்தில் ஓவியாவிற்கு காதலராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் படப்பிடிப்பு ஏப்ரல் 20-ம் தேதி துவங்க உள்ளது.