இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது பிறந்த நாளை சியான் 60 படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் , சனந்த் ரெட்டி , முத்துக்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடி வந்தார். அவருக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. அந்த வகையில் நேற்று சியான் 60 படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
unknown node