ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற கீர்த்தி சுரேஷ் – சிவகார்த்திகேயன்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

16-வது சீசன் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ

16-வது சீசன் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் போட்டியை பார்க்க சென்னை ரசிகர்கள் பலரும் வந்தனர்.  ரசிகர்களை போல சில சினிமா பிரபலங்களும் போட்டியை காண நேரடியாக மைதானத்திற்கு வருகை தந்தார்கள்.

unknown node

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் சதிஷ் குமார்,  உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும்  சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  ஆட்டத்தை நேரில் கண்டு உற்சாகமடைந்தனர்.

unknown node

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நேற்று லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.