இந்தியில் ரீமேக்காகும் "கோலமாவு கோகிலா".! நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை.!

It has been reported that Janvi Kapoor will play the role of Nayanthara following the Hindi remake of Nayanthara's Kolamavu Kokila.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் ஆவதை தொடர்ந்து நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் “கோலமாவு கோகிலா”. நயன்தாராவின் அருமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.அந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது அதனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியில் ரீமேக்காகும் கோலமாவு கோகிலா படத்தில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகளும் , பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தினை அறிமுக இயக்குனரான சித்தார்த் சென்குப்தா இயக்க , ஆனந்த் எல் ராய் தயாரிக்கிறார் .இந்த படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்கவுள்ளதாகவும் ,ஒரு மாதத்தில் படத்தினை எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.