#LeoIndustryHit : பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்த 'லியோ'! 12 நாள் வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

லியோ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்றதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் அறிவித்துள்ளது.

LeoIndustryHit

லியோ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்றதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் அறிவித்துள்ளது.

லியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “லியோ”. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

வசூல்

விமர்சனங்கள் படத்திற்கு கலவையாக வந்தாலும் கூட படத்தின் வசூல் பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் முதல் நாளில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும், கேரளாவில் அதிகம் வசூல் செய்த சாதனை என்றும் பல சாதனைகளை படைத்தது. இன்னும் சாதனைகளை புடைத்துக்கொண்டு இரண்டாவது வாரமாக வசூலை குவித்து வருகிறது.

500 கோடியை தாண்டிய லியோ

இந்த நிலையில், லியோ திரைப்படம் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படம் எத்தனை கோடி இதுவரை வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, லியோ படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் 540  கோடி வசூல் செய்திருப்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி விழா

லியோ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கொண்டாட திட்டமிட்டு உள்ளது. அதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து தயாராக இருக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு உறையாற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.