நெகட்டிவ் இருக்கட்டும்..’கோட்’ வந்து பதிலடி கொடுக்கும்! பிரசாந்த் பேச்சு!

prashanth goat

சென்னை : விஜய் படங்கள் என்றாலே வெளியாவதற்கு முன்னதாக நெகடிவான விமர்சனங்கள், சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை. அந்த வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படமும் கூட நெகடிவான விமர்சனங்களுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

படம் இன்னும் வெளியாக பல நாட்கள் இருக்கிறது. இருப்பினும் படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் விஜய் லுக் என அனைத்துமே நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது இது அனைத்திற்கும் கண்டிப்பாக கோட் படம் வெளியாகி பதிலடி கொடுக்கும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரசாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கோட் படத்திற்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி பேசியுள்ளார். சென்னையில் இது குறித்து பேசிய அவர் ” கோட் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றி எந்த கவலையும் இல்லை. கண்டிப்பாக படம் வெளியான பிறகு கண்டிப்பாக படம் பற்றி தான் பேசுவார்கள்.

படத்தினை வெங்கட் பிரபு மிகவும் அருமையாக எடுத்து இருக்கிறார். படம் வெளியான பிறகு நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள்” எனவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பிரசாந்த் பேசியதை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது.

கோட் படம் எந்த மாதிரி ஒரு கதை கொண்ட படமாக இருக்க போகிறது. படத்தில் என்னென்ன சஸ்பென்ஸ் எல்லாம் இருக்க போகிறது என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்துள்ளனர். அவர்களின் காத்திருப்பிற்கும், நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் வரும் செப்டம்பர் 5 விடை கிடைக்கும்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்