சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
unknown nodeViduthalaiPart1FromMarch31 [Image Source : Google ]
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்திற்கு சென்சாரில் அதிகாரிகள் ‘A’ சான்றிதழ் கொடுத்திருந்தார்கள்.
unknown nodeviduthalai soori [Image Source : Twitter]
இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் பாகம் சில நிர்வாண காட்சிகளுடன் வெளியாக இருக்கிறது. இப்படியான சில காட்சிகளுக்கு கத்தரி போட்டால் U/A சான்றிதழ் தருவதாக தணிக்கை வாரியம் கூறியுள்ளதாம். ஆனால், எங்களுக்கு ‘A’ சர்டிபிகேட் பரவாயில்லை என்று வெற்றிமாறன் வாங்கிக் கொண்டாராம்.
unknown nodeVIDUTHALAI 2 [Image Source : Twitter]
அந்த மாதிரி நிர்வாண காட்சிள் படத்தின் ஆழத்தை காட்ட தேவைப்பட்டது என்பதால் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விடுதலை 2-வது பாகம் வரும் செம்டம்பர் மாதமே வெளியாகவுள்ளதாக மற்றோரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.