லவ் டுடே படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை கொள்ளை அடித்த நடிகை இவானா அடுத்ததாக ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக புது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பிவி.சங்கர் என்பவர் இயக்கியுள்ளார்.
படத்தில் பாரதிராஜாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு “கள்வன் ” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க, TN சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. மோஷன் போஸ்டரை பார்க்கையில் படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக தெரிகிறது. காட்டிற்குள் நாடாகும் சம்பவத்தை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.
மேலும். படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிப்பதாலும், படத்தில் இவானா கதாநாயகியாக நடிப்பதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கு முன்பே இவர்கள் இருவரும் நாச்சியார் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node