வெற்றிக்கான கமர்ஷியல் ஃபார்முலாவை கையில் எடுத்துக்கொண்டு, தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ என்ற படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கி ஜவான் வரை தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் இயக்குனர் அட்லீ இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் தற்பொழுது, அவரது மனைவி ப்ரியாவும் அவருக்கு அன்பு குறிப்புடன் வாழ்த்து தெரிவித்தார், மேலும் அவர்களது மகன் மீர் உடன் இருக்கும் அழகான குடும்பப் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
unknown nodeAtlee – Priya [Image source : priyaatlee]
அந்த பதிவில் ப்ரியா, “ஒவ்வொரு விஷயத்திற்கும் உன்னை நேசிக்கிறேன், எல்லா வழிகளிலும் என் வாழ்க்கையை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி. லவ் யூ மை அட்லீ, லவ் யூ (MEER) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeகடைசியாக பதான் என்ற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை வழங்கிய, அட்லீ ஜவான் திரைப்படத்தில் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் 907..54 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
