மாநாடு திரைப்படத்தின் வெறித்தனமான அப்டேட்.!

மாநாடு படத்தின் இரண்டாவது பாடல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் பரிசாக வரும் 31-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் இரண்டாவது பாடல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் பரிசாக வரும் 31-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சனா கீர்த்தி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

unknown node

படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல், டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி, மாநாடு படத்தின் இரண்டாவது பாடல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் பரிசாக வரும் 31-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.