சரக்கு சாம்ராஜ்யத்தின் மஹாராஜா, எங்க அப்பன்.! அனல் பறக்கும் 'விக்ரம் – துருவ்' ஆட்டம்.!

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

unknown node

இதையும் படியுங்களேன்-#CINEMABREAKING: பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வலிமை!

unknown node

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ் செய்ய தயாராகிவிட்டது. அட ஆமாங்க.. இந்தப் படம் நேரடியாக OTT-யில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகிறது.

unknown node

அதன்படி, சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வருசையாக வெளியானது. அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் இன்று 12 மணிக்கு வெளியானது, இதில் முதலில் விக்ரம் பள்ளி வாத்தியாராக இருக்கிறார். பின்பு, ரவுடியாக சாராயம் காச்சி அடிதடியில் ஈடுபடுவது போல் ட்ரைலரில் காட்சி அமைந்துள்ளது.

unknown node

இப்படம், முழுக்க முழுக்க அதிடி ஆக்சன் நிறைந்த திரில்லர் காட்சிகளாக உருவாகியுள்ளது. இதில் விக்ரம் மகன் “சரக்கு சாம்ராஜ்யத்தின் மஹாராஜா, எங்க அப்பன்” என்ற சொல்லும் வசனம் கலக்கலாக அமைத்துள்ளது. இதோ அந்த ட்ரைலர்..