கோப்ரா படத்திற்கான மரண மாஸ் அப்டேட்..!

Irfan Pathan has completed his shooting for the film Cobra

கோப்ரா படத்திற்கான தனது படப்பிடிப்பை முழுவதுமாக இர்பான் பதான்  முடித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்திலிருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தில் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பு முடிக்க தற்போது கோப்ரா படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கோப்ரா படத்தின் கடைசி காட்சியை படமாக்க படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் இர்பான் பதான் தனது படப்பிடிப்பை முடித்துள்ளார். விரைவில் இந்த படத்திற்கான அடுத்த அப்டேட் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்ரா படத்திற்கான மரண மாஸ் அப்டேட்..!