நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வலிமை இயக்குனரை சந்தித்த மாஸ்டர் இயக்குனர்..!

Following the success of the master film, director Lokesh Kanagaraj has met H. Vinod, the director of the valimai film.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வலிமை படத்தின் இயக்குனரான ஹெச்.வினோத்தை சந்தித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித்  ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று போனிகபூர் கூறியிருந்தார்.

இதனை தொடர்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வலிமை படத்தின் இயக்குனரான ஹெச்.வினோத்தை சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படத்தையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “பல ஆண்டுகளுக்குப் பிறகு வினோத் அண்ணாவுடன் கழித்த நல்ல நேரம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் நம்மளோட சண்டையெல்லாம் தாண்டி வினோத் மேல பெரிய நம்பிக்கை உள்ளது என்றும் அஜித் ரசிகர்கள் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களை வைத்து படம் பண்ணிடோம் என்று அந்த திமிரும் ஆங்காரமும் வரமா இன்னும் மிகவும் எளிமையாக தரையில் அமர்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க.இந்த எழிமை காகவே இன்னும் பெரிய எடத்துக்கு போகனும் வாழ்த்துகள் என்று கூறிவருகிறார்கள்.