பொங்கலிற்கு வெளியாகிறதா மாஸ்டர்..? U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு ...!

The master film starring Vijay has been given U / A certification by the audition committee. master film is come to the screen soon.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வர வாய்ப்பு.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தில் டீசரும் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த மே மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

மேலும் இந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 தேதி உறுதி என்று தகவல்கள் சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது. இதற்கான அதிகார்வ பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்க படுகிறது. மேலும் மாஸ்டர் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.