மாஸ்டர் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு..!

The release date of the master film will be announced tomorrow at 12.30pm, the film’s production company Xavier Brito has announced on its

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி நாளை மதியம் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோ நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் மாஸ்டர் படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் மாஸ்டர் படம் விவகாரம் தொடர்பாகவும் திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வர் பழனிசாமியிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி நாளை மதியம் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோ நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

unknown node
மாஸ்டர் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு..!