சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது தணிக்கைத் துறை.
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது.
unknown nodeஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் அவர்கள் சர்கார் ஓடும் திரையரங்கில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கையில் தணிக்கைக்குழு நீக்கியது.சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது.
unknown nodeஇது தொடர்பாக தணிக்கைத் துறை வெளியிட்ட தகவலில் , சர்கார் திரைப்படத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டரை எரிக்கும் 5 வினாடி காட்சி நீக்கபட்டுள்ளது.அதேபோல் கோமளவல்லி மற்றும் பொதுப்பணித்துறை என்ற வார்த்தை வரும் இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொதுப்பணித்துறை மற்றும் 56 வருஷம் என்று இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம் இன்று மாலை 70% திரையரங்குகளில் திரையிட வாய்ப்பு உள்ளது.