பார்சலில் வந்த காணாமல் போன 'ஐபோன்'...கடும் அதிர்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு.!!

நடிகை ஷாலு ஷம்மு தன்னுடைய ஐபோன் காணவில்லை என்று காவல் நிலையத்தில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.  கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி  இரவு

நடிகை ஷாலு ஷம்மு தன்னுடைய ஐபோன் காணவில்லை என்று காவல் நிலையத்தில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.  கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி  இரவு ஈஸ்டர் பண்டிகையன்று ஷாலு சம்மு தனது  நண்பர்களோடு இணைந்து பார்ட்டிக்காக எம்.ஆர்.சி நகரில் உள்ள சேமர்செட் என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

unknown node

நள்ளிரவு 2 மணியளவில்  அந்த பார்ட்டியை முடித்துவிட்டு ஷாலு சம்மு  நண்பர் வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிறகு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது ஷாலு ஷம்மு வாங்கி இருந்த விலையுயர்ந்த ஐபோன் காணவில்லை. இதனால் கடும் ஷாக்கான ஷாலு சம்மு தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார்.

unknown node

ஆனால். அவரால் செல்போனை எங்கு வைத்தோம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை, இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது உடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

unknown node

இந்நிலையில், இன்று அவரது வீட்டிற்க்கு டன்சோவில் பார்சல் வந்துள்ளது. அதில், காணாமல்போன ஐபோன் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷாலு, தனது நண்பர்களில் யாரோ ஒருவர்தான் திருடியதாக தெரிவித்துள்ளார். மேலும், “தனது 8 வருட நட்பு வீணாகிவிட்டது” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

unknown node