'பிச்சைக்காரன்' கூட்டணி மீண்டும் மாஸ் ரீ-என்ட்ரி! 'நூறு சாமி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

"தாயை தெய்வமாக மதித்தது 'பிச்சைக்காரன்', தாயை மனுஷியாகப் பார்க்கத் தொடங்குவதுதான் 'நூறு சாமி'" என்று படத்தின் மையக்கருத்தை இயக்குநர் சசி விளக்கமாக தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : இயக்குநர் சசி-நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணையும், ஒற்றைத் தாயின் (சிங்கிள் மதர்) கதையை சொல்லும் உணர்வுப்பூர்வமான திரைப்படம் 'நூறு சாமி' ஜூன் 19 உலகெங்கும் வெளியாகிறது.

Vijay Antony nooru sami movie.webp

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'நூறு சாமி' திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சசியும், நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள 'நூறு சாமி' திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

Nooru Saami.webp

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'நூறு சாமி', உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கிராமத்து பின்னணியில் ஒற்றைத் தாயின் (சிங்கிள் மதர்) உணர்வுப்பூர்வமான கதையை சொல்லும் திரைப்படம் ஆகும்.

விஜய் ஆண்டனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

nooru sami movie shooting.webp

'நூறு சாமி' திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, "தாயை தெய்வமாக மதித்தான் அது 'பிச்சைக்காரன்', தாயை மனுஷியாக பார்க்க தொடங்கினான் அது 'நூறு சாமி'. இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் வெகுகாலம் பேசப்படும்," என்றார்.

'பிச்சைக்காரன்' படத்திற்கு பின்னர் விஜய் ஆண்டனியுடன் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் சசி, "ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் அவர். கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். சுவாசிகாவும் அருமையான பங்களிப்பை தந்துள்ளார். 'நூறு சாமி' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்வார்," என்றார்.

nooru sami  Vijay Antony movie.webp

நகரம், கிராமம் என இரு பின்னணிகளிலும் படங்களை உருவாக்கி வரும் இயக்குநர் சசி, "நகரத்தில் வளர்ந்து வாழ்ந்து வரும் எனக்கு கிராமத்துக் கதைகளை எடுக்க மிகவும் பிடித்துள்ளது. அவற்றில் உள்ள சவால்களும், இடம் பெறும் மண் மணம் மாறா கதை மாந்தர்களும் இதற்கு காரணம்," என்றார்.

'நூறு சாமி' திரைப்படத்திற்கு பாலஜி ஸ்ரீராம் இசையமைக்க, எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். ஹரிஷ் யுவராஜ் படத்தொகுப்பிற்கு பொறுப்பேற்க, வி. சசிகுமார் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.

Vijay Antony movie.webp

நடனம்: விஜி சதீஷ், சண்டைப் பயிற்சி: ராம்குமார், பாடல்கள்: மோகன் ராஜன், உடைகள் வடிவமைப்பு: துர்கா பிரியா, உடைகள்: கணேஷ். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில், சசி இயக்கத்தில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'நூறு சாமி' திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

'பிச்சைக்காரன்' கூட்டணி மீண்டும் மாஸ் ரீ-என்ட்ரி! 'நூறு சாமி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!