பொம்மை திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட இசைபுயல்.!

பொம்மை திரைப்படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

பொம்மை திரைப்படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

பொம்மை

unknown node

Bommai Movie [Image Source : Twitter]

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. சைக்கோ த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பொம்மை படத்தின் முதல் பாடல்

பொம்மை திரைப்படத்திற்கான டிரைலர் கடந்த ஆண்டு வெளியான நிலையில், அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node

முத்தம் முத்தம் என தொடங்கும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். பாடலை யுவன் இசையமைத்து பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். பாடல் மிகவு அருமையாக இருப்பதால் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் ஆகும் என கூறப்படுகிறது.

பொம்மை விரைவில் ரிலீஸ்

unknown node

Bommai Movie [Image Source : Twitter]

ஏற்கனவே ‘பொம்மை’ திரைப்படத்திற்கான டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகும் போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அறிவிக்கப்படவில்லை, இதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு படத்தில் இருந்து பாடல் வெளியாகியுள்ளது என்பதால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.