ராம் உதவியாளர் மாறி செல்வராஜ் இயக்கியுள்ள படம், பரியேறும் பெருமாள். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜிஸ் ஆகியோருடன் கறுப்பி என்ற நாய் நடித்துள்ளது. படம் குறித்து ஆனந்தி கூறுகையில், ‘ இதுவரை இப்படியொரு கேரக்டரில் நான் நடித்ததில்லை.
எனவே, நான் தான் டப்பிங் பேசுவேன் என்று இயக்குனரிடம் அடம்பிடித்து பேசியிருக்கிறேன்.நடிப்பது நான், டப்பிங் பேசுவது இன்னொருவர் என்றால், திருப்தி கிடைக்காது. படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துஹ்ள்ள கறுப்பி நாய், ஹய்லைட்டாக பேசப்படும். வரும் 28ம் தேதி படம் ரிலீசாகிறது” என்றார்.