14 வருடங்கள் கடந்தும் வெற்றிகரமாக் தொடர்ந்து பயணிக்கும் லேடி சூப்பர்ஸ்டார்!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தில் துவங்கி தற்போது வேலைக்காரன் வரையிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்து ,அவரின்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தில் துவங்கி தற்போது வேலைக்காரன் வரையிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்து ,அவரின்   திரை உலக பயணம் தொடங்கி 14 வருடங்கள் கடந்தும் வெற்றிகரமாக் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

unknown node

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் முன்னணி நடிகைக்கான அந்தஸ்துடனே வலம் வரும் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அறம், டோரா, வேலைக்காரன் என தொடர் வெற்றி படங்கள் வெளியாகின, தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இவரது சில படங்களின் அறிவிப்பு இவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து இவர் நடிப்பில் இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் முடிந்து கொலையுதிர் காலம் படம் உருவாகிவருகிறது.

unknown node

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் இவர் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் நேற்று முதல் வலைதளங்களை ஆட்டி படைத்து வருகிறது.

unknown node

அஜித்துடன் முன்னதாகவே பில்லா, ஏகன், ஆரம்பம் என ஜோடி சேர்ந்த நடிகை நயன்தாரா இப்படத்திலும் இணைந்திருப்பது பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

மேலும் நேற்றே மற்றொரு படமாக லட்சுமி, மா, குறும்படங்களின் இயக்குநர் சர்ஜூன் இயக்கத்திலும் ஒரு த்ரில்லர் கதையில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.