நயன்தாராவை அடுத்து சமந்தா படத்திற்கு வசூல் மழை....!!!!

சமந்தா நடிப்பில் கடந்த வாரம் யு-டர்ன் படம் திரைக்கு வந்தது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் படம் மெகா ஹிட் ஆனது.

சமந்தா நடிப்பில் கடந்த வாரம் யு-டர்ன் படம் திரைக்கு வந்தது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் படம் மெகா ஹிட் ஆனது.

அதை தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மீது ரசிகர்கள் கவனம் சென்றுள்ளது.

இந்நிலையில் சமந்தா நடித்த யு-டர்ன் படம் கடந்த வாரம் வெளிவந்து தற்போது வரை ரூ 3.7 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.

அதேபோல் ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படம் ரூ.7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், அமெரிக்காவில் ரூ 80 லட்சம் வரை வசூல் செய்துவிட்டது.

நயன்தாரா, அனுஸ்காவை தொடர்ந்து சமந்தாவும் சோலோ ஹீரோயினாகா இதன் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்.