தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய ஒரு நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைபோல் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த படங்களை தொடர்ந்து விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்டகத்தி , மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeமேலும் இந்த படம் ” கேஜிஎப்” திரைப்படம் போலவே தங்கச்சுரங்கம் பற்றிய கதைக்களத்தை கொண்டது என்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பை கேஜிஎஃப் லோகேஷனில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த மதமே படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
unknown nodeஇந்நிலையில் 18-ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதைகளத்தை கொண்டுள்ள இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பார்க்காத அளவிற்கு விக்ரம் இந்த படத்தில் தனது அசுர நடிப்பை வெளிப்படுத்துவர் என தெரிகிறது.