சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் அன்மையில் திரையரங்குகளில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் . மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
unknown node