பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஆகஸ்ட் 3- ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசையமைக்கிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையரங்குகள் திறந்த பிறகு படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஆகஸ்ட் 3- ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று நடிகை ஆண்ட்ரியா அறிவித்துள்ளார். பிசாசு படத்தின் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown node