அடுத்ததாக தனுஷ் ரசிகர்களுக்கு ரகிட ரகிட தான்..!

It is said that the Rakita Rakita video song featuring Jagame Tantra starring Dhanush will be released soon.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் இடம்பெற்ற ரகிட ரகிட வீடியோ பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜகமே தந்திரம் படத்தின் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது இதனை தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரகிட ரகிட வீடியோ பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.