கால்ஷீட் இல்லை...கமலுடன் நடிக்க மறுத்த த்ரிஷா.! ஓகே சொல்வாரா நயன்தாரா..?

நடிகர் கமல்ஹாசனின் '234'வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளார். 'நாயகன்' படத்தை தொடந்து 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி சேர்வதால், படத்தை தரமாக எடுக்க

நடிகர் கமல்ஹாசனின் ‘234’வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளார். ‘நாயகன்’ படத்தை தொடந்து 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி சேர்வதால், படத்தை தரமாக எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தை கமலே தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறது.

unknown node

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், த்ரிஷா லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் இல்லாத காரணத்தால் மறுத்துவிட்டாராம்.

unknown node

எனவே, ஆர் படத்தின் ஹீரோயினாக நடிக்க கால்ஷீட் இல்லாததால், தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் ஓகே சொன்னால், கமல், நயன்தாரா சேர்ந்து நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். இதுவரை பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை.

unknown node

இருவரும் இணைந்து ஒரு படத்திலாவது நடிப்பார்களா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், நடிகை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.