நடிகர் நானி தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “தசரா“. இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeDasara [Image Source: Google ]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வரும் மார்ச் 30-ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeDasara [Image Source: Google ]
அந்த வகையில், நடிகர் நானி சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்டு படத்திற்காக பட்ட கஷ்டங்களை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நானி ” சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்திற்கு அருகே படப்பிடிப்பு இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் கடினமாக இருந்தது.
unknown nodeNani [Image Source : Twitter]
படத்தின் சில காட்சிகளில் கண்கள் சிவக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டபோதெல்லாம் நான் மது எடுத்துக்கொண்டேன். படப்பிடிப்பில் சரியான தூக்கமும் இல்லை. படத்திற்காக ரொம்பவே கஷ்ட பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.