கவிஞர் வைரமுத்து இதுவரை தமிழில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களுக்கு மயங்காத ஆளே இருக்கமுடியாது என்றே கூறலாம். குறிப்பாக வைரமுத்து + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காவியம். இதனால் பல நடிகர்கள், நடிகைகள் வைரமுத்துவின் பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசுவது உண்டு.
unknown nodeVairamuthu And AR Rahman [ Image Source: Google]
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு வைரமுத்து பாடல் வரிகளில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மிகவும் பிடிக்கும் என புகழ்ந்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்-அந்தமாதிரி ப்ரொபோஸ் எல்லாம் வருது… ஆனாலும் நான்..? ஓபனாக பேசிய ‘புஷ்பா’ ரேஷ்மா.!
unknown nodeSamyuktha Menon About Vairamuthu Songs [ Image Source: Google]
அந்த வீடியோவில், சம்யுக்தா மேனன் பேசியது “வைரமுத்து சார் எழுதிய பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். “வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் .. துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்” . “காற்றே என் வாசல் வந்தாய்” உள்ளிட்ட சில வரிகள் தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
unknown nodeSamyuktha Menon About Vairamuthu Songs [ Image Source: Google]
இந்த வீடியோவை பார்த்த வைரமுத்து தந்து ட்வீட்டர் பக்கத்தில் ” மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு வரிகளை நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே தமிழும் மலையாளமும் உறவு மொழிகள் நாம் கலையால் ஒன்றுபடுவோம்; காலத்தை வென்றுவிடுவோம்” என உருவி பதிவிட்டுள்ளார்.
மலையாளம்
நனைந்த தமிழில்
என் பாட்டு வரிகளை
நீ சொல்லச் சொல்லப்
பரவசமானேன் மகளேதமிழும் மலையாளமும்
உறவு மொழிகள்நாம்
கலையால் ஒன்றுபடுவோம்;
காலத்தை வென்றுவிடுவோம்#தமிழ் #Tamil #Malayalam@iamsamyuktha_ pic.twitter.com/UCwxnGjxEY— வைரமுத்து (@Vairamuthu) October 13, 2022