துணிவு திரைப்படத்தின் OST வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘துணிவு’. இந்த

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘துணிவு’. இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கோக்கன், ஜி. எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

unknown node

Thunivu [Image Source : Twitter ]

இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம்.

unknown node

ThunivuOST Releasing Tomorrow [Image Source : Twitter]

இந்த நிலையில், படத்திற்கான OST- ஒரிஜினல் சவுண்ட் டிராக் நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து.  ரசிகர்கள் அனைவரும் படத்தின் OST-யில் தங்களுக்கு பிடித்த டோன்களை ரிங்க் டோனாக வைக்க காத்திருந்தார்கள்.

unknown node

நேற்று அறிவித்தபடி தற்போது படத்திற்கான OST- ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் துணிவு திரைப்படம் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும், படத்தை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.