வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

நானி நடிப்பில் வெளியான "சூர்யாவின் சனிக்கிழமை" திரைப்படம் OTT ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

Saripodhaa Sanivaaram

சென்னை :நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சரிபோதா சனிவாரம்” திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சரிபோதா சனிவாரம் ஒரு அதிரடித் தெலுங்கு திரைப்படமாகும். இது தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகிறது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த படத்தில் நானி தவிர, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, முரளி சர்மா மற்றும் சாய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பாக்ஸ் ஆபிஸில் இப்படம் நல்ல வசூலை ஈட்டியது. சமீபத்தில் கூட ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில், இப்படம் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வருகின்ற செப்டம்பர் 26 தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘சுந்தராணிகி’ படத்திற்குப் பிறகு, நடிகர் நானி மற்றும் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இடையேயான இரண்டாவது கூட்டணியை இப்படம் குறிக்கிறது. இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.