பருத்திவீரன் படத்தில் நடித்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்..!!

Panchavarnam, who played the lead role of actor Karthik in the film Paruthiveeran, passed away yesterday due to ill health

பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம் இவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் பருத்திவீரன். இது கார்த்திக்கு முதல் திரைப்படமாகும். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம் இவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். இதில் “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று கூறிஉள்ளார்.

unknown node