தமிழ் சினிமாவில் தற்போதும் முன்னணி காமெடி நடிகராக ரசிகர் மனதில் இருக்கிறார் வைகைபுயல் வடிவேலு.
இவரும் நடிகர் பார்த்திபனும் சேர்ந்திருக்கும்படியான புகைப்படம் அண்மையில் வெளியானது. அதனை பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
தமிழ் சினிமாவில் தற்போதும் வடிவேலுவிற்கான இடம் காத்துக்கொண்டிருக்கிறது. அவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வில்லை என்றாலும் அவருக்கான தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் குறையவில்லை.
இவர் அடுத்து, கமல்ஹாசன் இயக்கி நடிக்கவுள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வடிவேலுவுடன் அண்மையில் எடுத்த புகைப்பபடமும், அதன் கீழே இன்றைய சந்திப்பு நாளை செய்தியாகலாம்’ என பார்த்திபன் பதிவிட்டிருந்தார்.
இவர்கள் கூட்டணியில் பாரதி கண்ணம்மா, வெற்றிகொடிக்கட்டு, குண்டக்க மண்டக்க என பல படங்களின் காமெடிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. ஆதலால் மீண்டும் இவர்கள் கூட்டணி இணைந்தால், ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக அமையும் என அடுத்த கட்ட அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.
unknown node