தனுஷின் நடிப்பில் வெகுநாட்கள் கிடப்பில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் நேற்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகும் திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தினை சத்ய ஜோதி பட நிறுவனம் தயாரித்துள்ளது.
unknown nodeஇப்படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இப்பதின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஜனவரியில் ரிலீசாக உள்ளது என கூறப்படுகிறது.விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். இப்படத்தின் முதல் பாடலான சில் ப்ரோ (chillBro) எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளாராம். அந்த பாடல் நாளை மாலை 6.30க்கு வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. தனுஷ் பாடியுள்ள இப்பாடலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.