நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுங்க...உரிமை கேட்கும் ராதிகா ஆப்தே.!

தமிழ் சினிமாவில் கபாலி,ஆல் இன் ஆல் அழகுராஜா , சித்திரம் பேசுதடி-2, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட் திரையுலகில் பல படங்களில்

தமிழ் சினிமாவில் கபாலி,ஆல் இன் ஆல் அழகுராஜா , சித்திரம் பேசுதடி-2, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி தனது மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக தைரியமாக இவர் தெரிவித்து விடுவார்.

unknown node

Radhika Apte [Image Source: Twitter ]

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ” சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என “தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ராதிகா ஆப்தே ” பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பார்வையாளர்களிடம் அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன.

unknown node

Radhika Apte [Image Source: Twitter ]

இப்போது பலருக்கு அந்த மாதிரி படங்கள் பிடிக்கிறது. சினிமாவில் பணியாற்றும் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பெயர், புகழ் என அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக பெண்கள் தீவிர முயற்சிகளை செய்து வருவது வரவேற்கத்தக்கது.

unknown node

Radhika Apte [Image Source: Twitter ]

சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் சினிமா துறையிலும் சமத்துவத்தை அமல்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் நடிகை ராதிகா ஆப்தே தற்போது “Mrs Undercover ” எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுங்க...உரிமை கேட்கும் ராதிகா ஆப்தே.!