காதல் படத்தில் நடித்த அருண்குமார் நீண்ட வருட காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தமிழில் கடந்த 2004 – ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் நடித்த அனைவரதின் கதாபாத்திரமும் மக்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது. குறிப்பாக கடையில் வேலை செய்யும் சிறுவனாக நடித்திருந்த அருண் குமார் கதாபாத்திரத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற பெப்ஸி காமெடி மூலம் இவர் பிரபலமானார்.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இவருக்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அருண்குமார் நீண்ட வருட காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.