எழுதி வச்சுக்கோங்க…பேட்ட – விக்ரம் மாதிரி குட் பேட் அக்லி! அடிச்சு சொல்லு ஜிவி பிரகாஷ்!

குட் பேட் அக்லி பயங்கர மாஸாக வந்திருக்கிறது எனவும், இந்த திரைப்படம் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

gv prakash about good bad ugly

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு குட் பேட் அக்லி படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிசந்திரன் இந்த திரைப்படத்தினை இயக்கி வருகிறார். படத்திலிருந்து வெளியான அஜித் லுக் தான் இந்த அளவுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்த காரணம். ஏனென்றால், கோட் சூட்டில் வில்லன் லுக்கில் அஜித் இந்த படத்தில் இருக்கிறார். அத்துடன் இன்னும் 2 கெட்டப்களில் இருந்தார்.

எனவே, படம் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் விரைவாக வெளியாகவிருக்கிறது. ஒரு பக்கம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாவது போல மற்றொரு பக்கம் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

ஏனென்றால், படத்தின் இசை குறித்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் பயங்கரமாக இருக்கும் என்னோட பெஸ்ட் கொடுப்பேன் என ஜிவி பிரகாஷ் பேசி வருவது தான். 18- வருடம் கழித்து அஜித் படத்திற்கு அவர் இசையமைத்து வருகிறார் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது. இந்த சூழலில், இன்னுமே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ் குட் பேட் அக்லி குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” குட் பேட் அக்லி திரைப்படம் மாஸாக சீக்கிரம் வரும். நான் ஆதிக் ரவிசந்திரன் உடன் மூன்றாவது முறையாக இணைக்கிறேன் என்பதால் அவருடைய வேலைகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். எனவே, ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக திரையரங்கில் பார்க்கும்போது இருக்கும். எப்படி பேட்ட -விக்ரம் ஒரு ரசிகர்களுக்கான படமாக இருக்கிறது அப்படி தான் குட் பேட் அக்லி படம் இருக்கும்” என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்