ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் பேட்ட & விஸ்வாசம்!!!

இன்று தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் ரசிகர்களின் பேராதரவுடன் படம் வெளியாகி உள்ளது. இந்த இரு

இன்று தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் ரசிகர்களின் பேராதரவுடன் படம் வெளியாகி உள்ளது. இந்த இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பேட்ட படம் பல டிவிஸ்ட்களோடு கடைசி வரை விறுவிறுப்பாக செல்கிறது. ஈன்றும், சூப்பர் ஸ்டாரை இயக்குனர் கரெக்டா பயன்படுத்தியுள்ளார் என்றும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் குடும்ப பிண்ணனியில் அஜித்தின் அலப்பறையான நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவரும் படி படம் அமைந்துள்ளது என பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதில் நடிகர் தனுஷ் பேட்ட படத்தை ரசிகர்களுடன் குடும்த்துடன் பார்த்து ரசித்து டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். அதே போல சிவகார்த்திகேயன் பேட்ட விஸ்வாசம் என இரு படங்களையும் பார்த்து பாராட்டியுள்ளார். அருண் விஜய் தலயின் விஸ்வாசம் திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

DINASUVADU

ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் பேட்ட & விஸ்வாசம்!!!