விக்ரம் படப்பிடிப்பிலிருந்து வெளியான இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeஇந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில், வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
unknown nodeஇந்த நிலையில், விக்ரம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் மூன்று பெறும் உள்ளனர்.
unknown nodeமற்றோரு புகைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ATV பைக்கில் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மற்றும் படத்தின் சண்டைக்காட்சி இயக்குனர் அன்பறிவு மூன்றுபேரும், ரைட் செல்கின்றார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.