ஆண்ட்ரியா பிறந்த நாள் பரிசாக "பிசாசு 2 " போஸ்டர்..!

Director Miskin has released a new poster for the movie Devil 2 on his Twitter page and congratulated actress Andrea.

இயக்குனர் மிஸ்கின் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிசாசு 2 படத்தில் உள்ள ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு நடிகை ஆண்ட்ரியாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திகே ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகிய பாடகி பிரியங்கா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் தற்போது நடிகை ஆண்ட்ரியா இன்று தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அந்த வகையில் இயக்குனர் மிஸ்கின் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிசாசு 2 படத்தில் உள்ள ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு நடிகை ஆண்ட்ரியாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

unknown node