நடிகர் அஜித்குமார் வரும் மே 1-ஆம் தேதி தன்னுடைய 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த படங்கள் திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்கள் திரையிடப்படுவது ஆவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கடந்த ஆண்டு கூட விஸ்வாசம் , வீரம் ஆகிய படங்கள் திரையிடப்படட்டது.
unknown nodeஇதனை தொடர்ந்து இந்த ஆண்டு எந்த திரைப்படம் திரையிடப்போகிறார்கள் என ரசிகர்கள் மிகவம் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள் இதற்கிடையில், நடிகர் அஜித்குமாரை ‘அமராவதி’ மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சோழா கிரியேஷன்ஸ் நிறுவனர் பொன்னுரங்கம், அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
unknown nodeஅது என்ன வேண்டுகோள் என்றால், கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான அமராவதியின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் மே 1 ஆம் தேதி உயர் தொழில்நுட்ப வடிவில் படத்தை மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. எனவே, இந்த படத்திற்கு ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென சோழா பொன்னுரங்கம் தெரிவித்துள்ளார்.
unknown node