'பொன்னியின் செல்வன் 2' பிரமாண்ட இசை திருவிழா.! சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் கமல்ஹாசன்.!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  உருவாகியுள்ள

பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

unknown node

ponniyin selvan 2 [Image Source : Twitter]

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

PonniyinSelvan2 music update [Image Source : Google ]

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு மைதானத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

KamalHaasan will be joining the PS2 audio launch [Image Source : Google ]

இதனையடுத்து, பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகும் போது அதனுடைய இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.