பிரமாண்டமாக நடைபெறவுள்ள "பொன்னியின் செல்வன் 2" இசை வெளியீட்டு விழா.! எப்போது தெரியுமா..?

2 பாகங்களாக  உருவான  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.  முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து அடுத்ததாக

2 பாகங்களாக  உருவான  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.  முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

unknown node

ponniyin selvan 2 [Image Source : Twitter]

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொன்னியின்  செல்வன் பட குழு ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக எடிட் செய்து வருகிறார்கள்.  ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முமரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

Ponniyin Selvan [Image Source: Twitter ]

இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் ஏப்ரல் -28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்று தகவலை தற்பொழுது கசிந்து உள்ளது . அதன்படி,பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச்- 29 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாம்.

unknown node

Ponniyin Selvan Part 2 New Update[Image Source : Twitter]

மேலும் முதல் பாகத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்கள். எனவே இந்த இரண்டாவது பாகத்தில் இசை வெளியீட்டு விழா இருக்கும் பல பிரபலங்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.