இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும், ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeபடம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தினமும் ஒவ்வொரு ஊராக சென்று படத்தை விளம்பரம் செய்து வரும் படக்குழு, சமூக வலைத்தளங்களில் தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறது.
unknown nodeஇந்த நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் படத்தின் ஆரம்பத்தில் சோழர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். அந்த வகையில், இரண்டாம் பாகத்திலும் அவரது பின்னணிக் குரலுடன்தான் படம் ஆரம்பமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeபொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கிடைத்த வேறவேற்ப விட, இரண்டாம் பாகத்திற்கு மாபெரும் வேறவேற்பு கிடைக்கும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.
unknown node