பொன்னியின் செல்வனுக்கு தாய்லாந்து செல்ல உள்ள படக்குழு! இதற்காக முடிவளர்க்க தொடங்கிய ஹீரோக்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் மணிரத்னத்தின் கனவு படம் என கூறப்பட்டு வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம்

மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் மணிரத்னத்தின் கனவு படம் என கூறப்பட்டு வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். வைரமுத்து 12 பாடல்களை எழுத உள்ளார். என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் என பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது. அதற்கான அப்டேட்  தற்போது வெளியாகியுள்ளது. இப்பட சூட்டிங் டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரை முதல் ஷெட்யூல் மட்டும் தாய்லாந்தில் உள்ள காடுகளில் படமாக்கப்பட உள்ளதாம். அதற்காக இப்பட ஹீரோக்களான கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் நீளமான முடி வளர்த்து வருகிறார்களாம். அதலால் ஹீரோக்களின் கமிட் ஆன மற்ற படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வரும் டிசம்பர் மாதம் இப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.