செம..! பொன்னியின் செல்வன் 2 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் டிரைலர் மார்ச் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் டிரைலர் மார்ச் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடலை படக்குழு வெளியிட்டது.

அந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் மார்ச் 29ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெற உள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினமே படத்தின் 3 நிமிட டிரைலர் வெளியாக உள்ளது.

unknown node